மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அமெரிக்காவின் ஜேக்சன் வித்ரோவ்-லேமன்ஸ் ஜோடி உடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 6-7 (5-7), 7-5, 10-7 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com