

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.
இன்று காலை நடைபெற்ற 2வது அரையிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தியாபே முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடியாக ஆடிய பென் ஷெல்டன் அடுத்த 3 செட்களை 6-3, 6-3, 7-5 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முதல் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பென் ஷெல்டன், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை சந்திக்கிறார்.