

சீனா ஓபனில் இன்று காலை பெண்களுக்கான 3-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாராஸ் நாட்டைச் சேர்ந்த சபலென்கா, 26-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் 20 வயதே ஆன நிகோலா பார்துன்கோவாவை எதிர்கொண்டார்.
இதில் சபலென்கா 4-6, 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியை தழுவினார். சபலென்கா 2 முறை டபுள் பால்ட்ஸ் செய்தார். 5-ல் ஒருமுறை கூட பிரெக் பாயின்ட்ஸ் பெறமுடியவில்லை. அதேவேளையில் பார்துன்கோவா 8-ல் 3 முறை பிரேக் பாயின்ட்ஸ் பெற்றார். சபலென்கா சர்வீஸ் செய்த கேம்-ஐ 7 முறையும், பார்துன்கோவா 9 முறையும் வென்றார்.
மற்றொரு போட்டியில் யாஸ்ட்ரிம்ஸ்காவை ஆஸ்திரேலியா வீராங்கனை சிஞ்சா கிராஸ் 6-1, 6-4 என எளிதாக வீழ்த்தினார்.