ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மேடிசன் கீஸ்

முதல் செட்டை மேடிசனும் 2-வது செட்டை சபலென்காவும் கைப்பற்றினர். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மேடிசன் கீஸ்
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா (பெலருசியா) மேடிசன் கீஸ் (போலந்து) ஆகியோர் மோதின.

இதில் முதல் செட்டை மேடிசனும் 2-வது செட்டை சபலென்காவும் கைப்பற்றினர். யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இதில் மேடிசன் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனால் 3-6, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com