அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி

முதல் செட்டை 4-6 எனவும், 3-வது செட்டை 2-6 எனவும் மேடிசன் கீஸ் இழந்தார்.2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.
அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி
Published on

அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடாவின் விக்டோரியா எம்போகோவை எதிர்கொண்டார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மேடிசன் கீஸ் இந்த போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

முதல் செட்டை 4-6 என இழந்த நிலையில், 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 2-6 என இழந்து ஏமாற்றம் அடைந்தார். எம்போகோ அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிர்ரெல்லை எதிர்கொள்கிறார்.

இந்த வருடத்தின் முதல் கிராண்ஸ்ட்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. மேடிசன் கீஸ் முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஒலேக்சான்ட்ரா ஒலிய்னிகோவாவை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com