டென்னிஸ் தரவரிசை: 2வது இடத்தை இழந்த கார்லோஸ் அல்காரஸ்

ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்தார்.
carlos
Published on

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

இந்நிலையில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மூன்றாவது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

பின்தங்கிய அல்காரஸ்

இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

நான்காவது இடத்தில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும், ஐந்தாவது இடத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இடம்பிடித்தனர்.

இத்தாலியின் பிளேவியோ கோபாலி 4 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடமும், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஒரு இடம் பின்தங்கி எட்டாவது இடமும், அமெரிக்காவின் பென் ஷெல்டன் 3 இடம் பின்தங்கி 9வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்திலும் உள்ளனர்.

அதிரடியாக முன்னேறிய ஆர்தர் பில்ஸ்

நேற்று நடந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 10 இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே 11 இடங்கள் முன்னேறி 12-வது இடம் பிடித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com