சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆர்தர் பில்ஸ், தியாபே

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
arthur fils, frances tiafoe
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. நேற்று அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலியின் பிளேவியோ கோபாலி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-3, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, சக நாட்டு வீரரான பிராண்டன் நகஷிமா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய தியாபே 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com