சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஆர்தர் பில்ஸ், கோபாலி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
arthur fils
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் டாமி பால், இத்தாலியின் பிளேவியோ கோபாலி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி வீரர் 2-6, 6-3, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினாவின் தியாகோ ஆஸ்டின், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் இத்தாலியின் பிளேவியோ கோபாலி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com