செங்டு ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் வீரர்

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
muller
Published on: 
Summary

சீனாவில் நடந்து வரும் செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர் வெற்றி பெற்றார்.

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர், இத்தாலியின் பெடரிகோ சினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முல்லர் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதியில் அலெக்சாண்ட்ரே முல்லர், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com