வூஹான் ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்ட்ரா ஈலாவுக்கு அதிர்ச்சி அளித்த சீன வீராங்கனை

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
alexandra eala
Published on: 
Summary

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனையான அலெக்சாண்ட்ரா ஈலாவை சீன வீராங்கனை தோற்கடித்தார்.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த முதல் சுற்றில் முன்னணி வீராங்கனையான பிலிப்பைன்சைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா ஈலா, சீனாவின் ஷி ஹன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஈலா முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட சீன வீராங்கனை அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான அலெக்சாண்ட்ரா ஈலா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com