

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா, குரோசியாவின் அண்டோனியா ரூயிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அலெக்சாண்ட்ரா ஈலா 7-6 (9-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் அலெக்சாண்ட்ரா ஈலா, கிரீசின் மரியா சக்காரியாவை எதிர்கொள்கிறார்.