ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
alexandra eala
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையான அலெக்சாண்ட்ரா ஈலா வெற்றி பெற்றார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா, ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஈலா முதல் செட்டை 4-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ஈலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-2, 6-0 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் ரஷியாவின் டயானா ஷ்னைடர், உஸ்பெகிஸ்தானின் கமீலா ராக்கிமோவா, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட் ஆகியோரும் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com