

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா, கிரீசின் மரியா சக்காரியா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அலெக்சாண்ட்ரா ஈலா முதல் செட்டை 7-5 என வென்றார்.
இதற்கு பதிலடியாக ஆடிய மரியா சக்காரி 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரா ஈலா 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரியா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா, அமெரிக்காவின் கிளெய்ர் லியூவை சந்திக்கிறார்.