ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் அலெக்ஸ் டி மினார், யூகோ ஹம்பர்ட்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் அலெக்ஸ் டி மினார், யூகோ ஹம்பர்ட்
Published on

ஆம்ஸ்டர்டாம்:

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், நெதர்லாந்தின் பொடிக் வான் டெ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 3-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ கன்னெலை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com