

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதவுள்ளார்.