

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஆர்தர் பெரியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோரும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் கார்லோஸ் அல்காரஸ், மெத்வதேவையும், ஸ்வரேவ் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரையும் சந்திக்கின்றனர்.