வியன்னா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.
alcaraz
Published on: 
Summary

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி

உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (13-11) என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலையும், ஸ்வரேவ் பிரிட்டனின் ஆர்தர் பெரியையும் சந்திக்கின்றனர்.

X