இத்தாலி ஓபன் டென்னிஸ்: சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது. இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்
Published on

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் தொடரிலேயே ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com