

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-4) 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
கடந்த ஆண்டு நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
காயத்தால் சில தொடர்களில் பங்கேற்காமல் இருந்த அல்காரஸ் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.