Barcelona Open | அல்காரஸ், ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
Barcelona Open | அல்காரஸ், ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி
Published on

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பின்லாந்தின் ஓட்டோ விர்டனன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மரியானோ நவானேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com