மாண்டே கார்லோ தொடரில் சாம்பியன்: தரவரிசையில் ஏற்றம் கண்ட அல்காரஸ்

மாண்டே கார்லோ டென்னிஸ் தொடரில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.இதையடுத்து தரவரிசையில் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி 2-வது இடம் பிடித்தார்.
மாண்டே கார்லோ தொடரில் சாம்பியன்: தரவரிசையில் ஏற்றம் கண்ட அல்காரஸ்
Published on

மாண்டே கார்லோ டென்னிஸ் தொடர் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

அதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தில் தொடருகிறார்.

மாண்டே கார்லோ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

இத்தாலி வீரரான முசெட்டி 5 இடங்கள் உயர்ந்து 11-வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com