Alcaraz | இந்தியன் வெல்ஸ் ஓபன்: அல்காரஸ், சின்னர், மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அல்காரஸ், சின்னர்
அல்காரஸ், சின்னர்
Published on

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி ஒன்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 6-4 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பிரிட்டிஷ் வீரர் ஜேக் டிராபரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லேனர் டைனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சின்னர் ஸ்வரேவுடனும், கார்லோஸ் மெத்வதேவுடனும் மோதுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com