

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3வது லீக் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் எளிதில் வெற்றி பெற்றார்.
உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.
இன்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் பிளேவியோ கோபாலி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார். இவர் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறினர்.