ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
alcaraz
Published on: 
Summary

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார்.

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே 7-6 (8-6), 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பிளேவியோ கோபாலியை வீழ்த்தினார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

X