

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார்.
பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டேனி உடன் மோதுவதாக இருந்தது.
காயத்தால் அவதிப்பட்டு வந்த பெரெட்டேனி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நம்பர் 1 வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.