பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்
Published on

மாட்ரிட்:

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் லாஸ்லோ டிரே உடன் மோதினார்.

இதில் அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com