ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
alcaraz
Published on: 
Summary

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.

இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 3-6 என இழந்த அல்காரஸ், அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (7-1) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவ், ரஷியாவின் மெத்வதேவ் நாளை அதிகாலை மோதுகின்றனர்.

X