மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்
Published on

மாண்டே கார்லோ:

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், சகநாட்டு வீரரான டேவிடோவிச் உடன் மோதினார்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com