ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
alcaraz
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், சக வீரர் ஜோம் மூனார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-1 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடக்கும் இறுதிச்சுற்றில் அல்காரஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com