ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் அல்காரஸ், காஸ்பர் ரூட்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் அல்காரஸ், காஸ்பர் ரூட்
Published on

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், காஸ்பர் ரூட்டுடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com