பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டி

முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர். ஐந்தாவது செட்டும் அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போனது.
பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டி
Published on

பாரிஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதினார்.

முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர்.

அனுமார் வால்போல் நீண்டு கொண்ட போன இந்த செட்டிலும் முடிவை அறிய டைபிரேக்கர் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இதில் சாதுர்யமாக ஆடிய அல்காரஸ் வெற்றிக்கனியை பறித்தார்.

சுமார் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் அல்காரஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை தோற்கடித்து பிரெஞ்சு ஓபனை தக்க வைத்துக் கொண்டார்.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டியாக இது பதிவானது. அதாவது பிரெஞ்சு ஓபனில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த முதல் இறுதி ஆட்டம் இது தான்.

22 வயதான அல்காரசுக்கு இது 5-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. அவருக்கு ரூ.24¾ கோடியும், 2-வது இடம் பிடித்த சின்னருக்கு ரூ.12½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com