அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அல்காரஸ், சிட்சிபாஸ் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
alcaraz, tsitsipas
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் நீண்ட நாளுக்குப் பிறகு களமிறங்கினார். அவர் ரஷியாவின் ரோமன் சபியுலின் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய

ஆர்தர் பில்ஸ் முதல் செட்டை 6-1 என கைபற்றினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடிய சிட்சிபாஸ் அதிரடியாக ஆடி அடுத்த 3 செட்களை 7-6 (7-3), 6-1, 6-4 என் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த வாரம் நடந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆர்தர் பில்ஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com