

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், சீனாவின் வூ யீ பிங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4வது சுற்றில் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதுகிறார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், செக் குடியரசின் ஜிரி லெஹேகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜிரி லெஹேகா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடிய சிட்சிபாஸ் அதிரடியாக ஆடி அடுத்த 3 செட்களை 6-1, 7-6 (7-3), 6-1 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4வது சுற்றில் சிட்சிபாஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதுகிறார்.