

ருமேனியாவின் தலைநகர் புக்காரெஸ்டில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான 2026 டிரியாக் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி, ஆஸ்திரியாவைச் சேர்ந்த நீல் ஓபர்லெய்ட்னர் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
முதல் சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி ருமேனியாவின் அலெக்சாண்டர் ஜேகன்- போஜ்டன் பவெல் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 2-6 என இழந்தது. ஆனால் 2-வது செட்டை 6-1 எனக் கைப்பற்றியது. அதன்பின் 1(12)-0(10) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.