டென்னிஸ் தரவரிசை: டாப் 10-ல் இடம்பிடித்த 2 உக்ரைன் வீராங்கனைகள்

அரினா சபலென்கா 99 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்திருந்தார்.
marta kostyuk, elina svitolina
Published on
Summary

பெண்கள் டென்னிஸ் தரவரிசையின் டாப் 10 பட்டியலில் 2 உக்ரைன் வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ரிபாகினா நம்பர் 1

இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, உலக தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்துக்கு முன்னேறினார்.

27 வயதான ரிபாகினா தரவரிசையில் முதலிடத்தை அலங்கரிக்கும் 30-வது மங்கை. முதல் கஜகஸ்தான் நாட்டவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

சரிந்த சபலென்கா

2024, அக்டோபரில் அரியணையில் ஏறி தொடர்ந்து 99 வாரம் 'நம்பர் ஒன்'னாக வலம் வந்த பெலாரசின் அரினா சபலென்கா 2-வது இடத்துக்கு தள்ளப்பட் டார்.

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மற்றும் கோகோ காப் 3, 4வது இடத்தில் உள்ளனர். ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 5வது இடத்தில் நீடிக்கிறார்.

செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6வது இடமும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2 இடங்கள் முன்னேறி 7-வது இடமும் பெற்றுள்ளனர்.

ஸ்வியாடெக் சரிவு

செக் குடியரசின் கரோலினா முசோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தலா ஒரு இடம் சரிந்து 8, 9வது இடத்தில் நீடிக்கின்றனர்.

உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் ஒரு இடம் முன்னேறி 10 வது இடத்தில் உள்ளார்.

டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் உக்ரைன் வீராங்கனைகள் 2 பேர் இடம் பெற்றிருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com