வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய தன்வி ஷர்மா, மாளவிகா பன்சோத்

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.
tanvi sharma
Published on
Summary

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் தன்வி ஷர்மா, மாளவிகா பன்சோத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் பன்னாசேத் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா 26-24, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் லீபைசுனை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com