

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் தன்வி ஷர்மா, இஷா பரூவா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, சக வீராங்கனையான மாளவிகா பன்சோத் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா 21-18, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா 21-15, 21-18 என்ற செட் கணக்கில் தைவானின் சிங் பிங் ஹுவானை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-12, 21-10 என்ற செட் கணக்கில் சக வீராங்கனையான மான்சி சிங்கை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.