Tanvi Sharma | ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் தன்வி ஷர்மா

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
தன்வி ஷர்மா
தன்வி ஷர்மா
Published on

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஒன்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜப்பானின் நட்சுகி நிடைரா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா 21-14, 21-14 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com