தமிழகத்தின் ஜோஷ்னா- வேலவன் ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது.
Joshna- velavan
Published on: 

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் பந்தயத்தில் இந்தியா சார்பில் 4 வீரர்கள், 4 வீராங்கனைகள் என 8 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஜோஷ்னா - வேலவன் ஜோடி வெற்றி

இன்று காலை நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா- வேலவன் செந்தில் குமார் ஜோடி பிலிப்பைன்சை சேர்ந்த டேவிட் பெலினோ- ஜெமிகா ஜோடியை எதிர்கொண்டது.

இதில் ஜோஷ்னா- வேலவன் ஜோடி 11-3, 11-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் பதக்கம் உறுதியானது.

ஒற்றையர் கால் இறுதி ஆட்டங்களில் இந்திய வீரர் அபய்சிங், வீராங்கனை ஆனந்த் சிங் ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.

அபய்சிங் 11-4,11-3, 11-6 என்ற கணக்கில் ஜப்பான் வீரரையும், ஆனந்த் சிங்11-2,11-5, 11-3 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த தன்வி கண்ணா வையும் தோற்கடித்தனர்.

டேபிள் டென்னிஸ்

இதேபோல டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது.

மனுஷ் ஷா- திவ்யா ஷாட்லே ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றதால் பதக்கம் உறுதி செய்யப்பட்டது. இந்திய ஜோடி கால் இறுதியில் 11-6, 13-15, 11-9,11-5 என்ற கணக்கில் ஆங்காங் ஜோடியை வீழ்த்தியது.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சச்சின் 4-1 என்ற கணக்கில் ஜோர்டானை சேர்ந்த அபுவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com