புரோ கபடி லீக்: கடைசி லீக் ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் தோல்வி

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக்: கடைசி லீக் ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் தோல்வி
Published on

புதுடெல்லி:

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.

மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 50-32 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com