புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்
Published on

சென்னை:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் அதிகபட்சமாக 26 புள்ளிகள் எடுத்தார். இதன்மூலம் தமிழ் தலைவாஸ் 6வது வெற்றியை பதிவு செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com