விம்பிள்டன் டென்னிஸ்- துனிசிய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.கால் இறுதியில் ஒன்ஸ் ஜபீர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.
ஒன்ஸ் ஜபீர்
ஒன்ஸ் ஜபீர்
Published on

லண்டன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) 24-வது நிலை வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) மோதினார்கள்.

இதில் ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் அவர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.

மற்ற ஆட்டங்களில் தஜ்னா மரியா, ஜூலி நீமையர் (ஜெர்மனி) வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com