2வது டெஸ்டில் எல்கர், பவுமா அரை சதம் - முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 278/5

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், பீட்டர்சன், பவுமா ஆகியோர் அரை சதமடித்தனர்.
அரை சதமடித்த பவுமா
அரை சதமடித்த பவுமா
Published on

போர்ட் எலிசபெத்:

வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எர்வி களமிறங்கினர். எர்வி 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய பீட்டர்சன் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். எல்கர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின், களமிறங்கிய பவுமா சிறப்பாக விளையாடினார். பீட்டர்சன் 64 ரன்களிலும் பவுமா 67 ரன்களிலும் வெளியேறினர்.

இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. 

வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், காலித் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com