4 ஆயிரம் ரன்னை கடந்த ராகுல்

30 வயதான ராகுல் ஐ.பி.எல். போட்டியில் 114 ஆட்டத்தில் 105 இன்னிங்சில் 4044 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல்லில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 11-வது இந்தியர் ராகுல் ஆவார்.
4 ஆயிரம் ரன்னை கடந்த ராகுல்
Published on

லக்னோ:

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 56 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 74 ரன் எடுத்தார்.

30-வது ரன்னை எடுத்த போது அவர் ஐ.பி.எல்.லில் 4 ஆயிரம் ரன்னை தொட்டார். 30 வயதான ராகுல் ஐ.பி.எல். போட்டியில் 114 ஆட்டத்தில் 105 இன்னிங்சில் 4044 ரன் எடுத்துள்ளார். சராசரி 47.02 ஆகும். 4 சதமும், 32 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 132 ரன் எடுத்துள்ளார்.

ஐ.பி.எல்லில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 11-வது இந்தியர் ராகுல் ஆவார். ஓட்டுமொத்தத்தில் 14-வது வீரர் ஆவார்.

விராட் கோலி (6838 ரன்), தவான் (6477), ரோகித் சர்மா (5966), ரெய்னா (5528), டோனி (5036), ராபன் உத்தப்பா (4952), தினேஷ் கார்த்திக் (4386), அம்பதி ராயுடு (4250), காம்பீர் (4217), ரகானே (4166) ஆகிய இந்திய வீரர்களோடு லோகேஷ் ராகுல் இணைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com