மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனை சதம் - நியூசிலாந்துக்கு 260 ரன் இலக்கு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
சதம் அடித்த வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனை
சதம் அடித்த வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனை
Published on

மவுண்ட் மவுன்கானு:

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளன.

கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் மகளிர் உலக கோப்பை போட்டி நடந்தது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.

12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது.

இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.

ரவுண்ட் ராபின் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இன்றைய தொடக்க ஆட் டத்தில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. இதனால் நியூசிலாந்துக்கு 260 ரன் இலக்காக இருந்தது.

வெஸ்ட்இண்டீஸ் தொடக்க வீராங்கனை ஹேலே மாத்யூஸ் அபாரமாக விளையாடி அவர் 119 ரன் எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com