ஆ‌ஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் திணறல்

இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
மைக்கேல் நீசர் விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆன்டர்சனை சக வீரர்கள் பாராட்டும் காட்சி
மைக்கேல் நீசர் விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆன்டர்சனை சக வீரர்கள் பாராட்டும் காட்சி
Published on

அடிலெய்டு:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி பகல்- இரவாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

டேவிட் மலான் 80 ரன்னும், கேப்டன் ஜோரூட் 67 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயன் 3 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

237 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 13 ரன்னில் அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்னும், மைக்கேல் நீசர் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.

இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா திணறியது. 55 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.

மைக்கேல் நீசர் 3 ரன்னில் ஆன்டர்சன் பந்திலும், ஹாரிஸ் 23 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்திலும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 6 ரன்னில் ராபின்சன் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

2-வது இன்னிங்சில் திணறினாலும் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருக்கிறது.

இதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கே வெற்றிவாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே முதல் டெஸ்டில் அந்த அணி வெற்றிபெற்று இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com