தேசிய சீனியர் ஸ்குவாஷ்: தமிழக வீராங்கனை ஷமினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஷமினா இறுதிப் போட்டியில் மராட்டியத்தை சேர்ந்த அகன்ஷா சலுங்கேயை சந்திக்கிறார்.
Shameena
Published on: 

எச்.சி.எல். தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் உள்ள ஓட்டர்ஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ஷமினா ரியாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

அவர் அரை இறுதியில் சக மாநிலத்தை சேர்ந்த முதல் நிலை வீராங்கனையான ரதிகா சீலனை 3–-2 (8-–11, 11-–7, 11-–8, 8-–11, 11-–3) என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

ஷமினா இறுதிப் போட்டியில் மராட்டியத்தை சேர்ந்த அகன்ஷா சலுங்கேயை சந்திக்கிறார்.

X