

ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் சிங் தூர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தஜிந்தர் சிங் தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தஜிந்தர் சிங் 20.64 மீட்டர் என்ற தூரத்துக்கு குண்டு எறிந்தார். இந்தப் போட்டியில் ஈரான் வீரர் முகமதுரெசா 20.81 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
2018-ம் ஆண்டில் தஜிந்தர்சிங் செய்திருந்த 20.75 மீட்டர் சாதனையையும் ஈரான் வீரர் முறியடித்துள்ளார்.
இந்தத் தொடரில் இந்திய அணிக்கு இன்று இது 6-வது பதக்கம் ஆகும். இந்தியா இதுவரை 4 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
கபடியில் இன்று இந்திய ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று அசத்தியது.