ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்: டெகாத்லான் பிரிவில் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தல்

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்‌ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர். 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்: டெகாத்லான் பிரிவில் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தல்
Published on

தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று நடந்த டெகாத்லான் பிரிவில் 7003 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதே போன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.

மற்றொரு 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என தலா 12 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 10 தங்கம் மற்றும் 17 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 14 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com