இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.190 கோடி வருவாய் இழப்பு- காரணம் இதுதான்!

2024-ல் ஏற்பட்ட அரசியல் காரணங்களால் ஐ.சி.சி. தொடரை நடத்தும் வாய்ப்பையும் இலங்கை இழந்தது.
womens champions trophy
Published on

முதலாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடை பெறுகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி மும்பை, வதோ ராவில் நடத்தப்படுகிறது.

இலங்கையில் இருந்து மாற்றம்

இந்த போட்டியை இலங்கையில் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் நடைபெற இருந்த போட்டி இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யாததால் இந்த மாற்றம் இருந்ததாக கூறப்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி மகளிர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் பணிகளுக்கான ஏற்பாடுகளையும் இலங்கை வாரியம் செய்யவில்லை என்று தெரிகிறது.

ரூ.190 கோடி இழப்பு

ஐ.சி.சி. அறிமுக மகளிர் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை இழந்த தால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.190 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பிரகாஷ் ஷாப்டர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது,"போட்டியை நடத்து வதற்கான போட்டிக் கட்டணம் கொடுக்கப்பட இருந்தது. ரூ.19 கோடி என நம்புகிறேன். அதே சம யத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய மும் தொடக்கத்தில் இருந்து மைதானங்களைச் சரிசெய்ய வேண்டியுள்ள தால் செலவு ஏற்பட இருந்தது" என்றார்.

ஷம்மி சிவாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போதைய இடைக்கால கமிட்டியை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் அமைத்தார்.

இந்த புதிய கமிட்டியினர் ஊழல் இல்லாத உள்ளூர் நிர்வாகிகளை நியமிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அதனால் ஐ.சி.சி. மகளிர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த முடியாமல் போய்விட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2024-ல் ஏற்பட்ட அரசியல் காரணங்களால் ஐ.சி.சி. தொடரை நடத்தும் வாய்ப்பையும் இலங்கை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com